பிறைசூடும் பெருமானே புலித்தோலை புனைவோனேபறைகொண்டு உன்னையே பாடி பணிந்தேனே மறைகளின் நாயகனே மாடையம்பதியோனேஉறைபனி மீதமர்ந்து உலகினை காப்பவனே கலைகளின் தலைவனே காலனை உதைத்தவனேஅலைகடல் எழுப்பிய ஆலத்தை உண்டவனேமலைமகள் மணாளனே மாலறியா மலையானேவலைவீசி மீன்பிடித்த சுந்தரனே அருள்வாயே
சிவன்