கல்யாணராமன்
வில் ஒன்று சொல் ஒன்று இல் ஒன்று என்றவனே
கல்யாண ராமனே காத்தருள் புரிவாயே
நல்லோர் நினைவிலே நாளும் இருப்பவனே
எல்லோர்க்கும் எளியவனே ஏரியை காத்தவனே
பரசுராமர் கர்வம் பங்கம் செய்தவனே
பரதனுக்கிரங்கியே பாதுகை தந்தவனே
மரகத வண்ணனே மனங்கவர் சுந்தரனே
மரங்கள் ஏழினையே சரத்தாலே துளைத்தவனே