நந்த குமாரன்
கடல் வண்ணா உந்தன் கழல் பணிந்தேனே
கருணைக்கடல் நீயே
காத்தருள் புரிவாயே
படம் எடுத்தாடிய பாம்பின் தலைமீது
நடனம் புரிந்தவனே நந்த குமாரனே
பரிதனை பிளந்த பாலகோபாலனே
கரிதனை வீழ்த்தியே கஞ்சனை அழித்தவனே
கிரிதனை ஏந்தியே கோகுலம் காத்தவனே
சரிநிகர் இல்லாத சுந்தர குமாரனே