காசிமாநகரினிலே
அருள்மிகு விசாலாட்சி, காசி:
காசிமாநகரினிலே கங்கை கரையினிலே
விசுவநாதன் உடனுறையும் விசாலாட்சியே சரணம்
மாசிலா சுந்தரமேஉன் மலர்ப்பதங்கள் பணிந்தேன்
வாசுதேவன் சோதரியே வரங்களைத் தருவாயே
மணிகர்ணிகா பீட மாணிக்கவல்லியே
பிணிகளை தீர்த்திடும் பிரணவஸ்வரூபியே
ஞான வைராக்கியம் தரும் ஞானசுந்தரியே அன்னபூரணித்தாயே ஆதரித்து அருள்வாயே