அருள்மிகு சுவாமிநாத சுவாமி சுவாமிமலை
மந்திரப் பொருளை தந்தைக்கு உரைத்த
சுவாமி நாதனின் தாள் பணிந்திடுவோம்
அந்திவண்ணனும் அம்மையும் மகிழ்ந்திட
அயனும் மாலும் போற்றி புகழ்ந்திட
தாரமர் கொன்றை அணிந்த பிரானுடன்
ஏரகத்தமர்ந்த சுந்தர விசாகனே
வானவர் போற்றிடும் பாலகுரு நாதனே
ஞானமும் கல்வியும் தந்தருள்வாயே