அருள்மிகு சென்னிமலை தண்டாயுதபாணி
செந்தில் நாதனே சேவற்கொடியோனே
சென்னிமலை வந்துனது சேவடி பணிந்தோமே
கந்தகோட்டத்துறை கண்டிகதிர்காமனே
குமரகோட்டத்துறை சுந்தர குமாரனே
மருதமலை மீதமர்ந்த குன்றக்குடியோனே
வயலூர் தனில்வாழும் வடபழனி ஆண்டவனே
எட்டுக்குடி எழுந்தருளும் பத்துமலை முருகனே
கழுகுமலை கந்தனே காத்தருள வேண்டுமய்யா