அருள்மிகு கண்டிகதிர்வேலன்
காவடிகள் ஏந்தி வந்து கண்டிகதிர்வேலனவன்
சேவடிகள் தொழுதாலே செல்வமெல்லாம் தருவானே
மூவடிகள் அளந்தோனின் முத்தான மருகனவன்
பூவடிகள் போற்றிடவே புண்ணியம் சேர்ந்திடுமே
சேவற்கொடியுடைய செந்தில் நாதனை
பாவங்களை போக்கும் பழனியாண்டவனை
தேவகுஞ்சரி பாகனை தினமும் பணிந்தாலே
ஆவன செய்வானே அரன்மகன்
சுந்தரனே