அருள்மிகு அந்தியூர் குருநாதசுவாமி
அந்தியூரில் அருள்புரியும் எங்கள் குருநாதனே
காமாட்சி வரதனுடன் காட்சி தந்தருள்பவனே
மானுடன் மழுவேந்தும் மகேசனும் நீயே
வேலுடன் மயிலேறும் வேலவனும் நீயே
அன்னைதவம் புரியவே முனிராயனை முடித்தவனே
சாந்தப்பன் மரபுடையோர் போற்றிடும் சுந்தரனே
ஆடிவிழாவினிலே வனக்கோயில் எழுந்தருளி
மகமேருதேரினிலே பவனிவந்தருள்பவனே