அருள்மிகு சரவணபவ குகன்:
சரவணபவ குகனே சண்முகனே உன்னை
சரண் புகுந்தேனே வரம் அருள்வாயே
சரவணப் பொய்கையில் நீராடி உன்னை
பரங்கிரியிலே கண்டு பரவசமடைந்தேனே
சிரம் நான்குடைய பிரமனை கடிந்த
சிரம் ஐந்துடைய பரமனிடம் உதித்த
சிரம் ஆறுடைய சுந்தர குமாரனே
சிரம் குவித்துனை கரம் தொழுதேனே