அருள்மிகு கதிர்வேல் முருகன்:
கிரிமகள் மைந்தனே கந்தனே சுந்தரனே
கரிமுகன் சோதரனே காத்தருள் புரிவாயே
கிரிதரன் மருகனே கார்த்திகேயனே
புரிசடை பரமனின் புதல்வனே குகனே
கிரிதனை தகர்த்த கங்கை பாலனே
அரிமுகனை அழித்த ஆறுமுக வேலவனே
வரிவளை அணிந்த வள்ளி மணாளனே
கரிமகள் கரம்பிடித்த கதிர்வேல் முருகனே