அருள்மிகு ஆறுமுக வேலன்:
ஆலோசனை ஏனோ ஆறுமுக வேலா உன்
காலைப் பிடித்திருக்கும் பாலன் எனக்கருள
மாலோலன் மருகனே மந்திரப் பொருளோனே
சூலபாணி மகிழ் சுந்தர குமாரனே
காலனை உதைத்த கண்ணுதற் கடவுளை
பட்டருக்கருளிய பரமேஸ்வரியை
ஆனைக்கு ஓடிய ஆராவமுதனை
வேலாநீ அறியாயோ காலத்தே வருவாயே