அருள்மிகு விசாகன்:
வைகாசி திங்களிலே விசாக நன்னாளிலே
கைலாச நாதனின் கண்ணிலே வந்தவனே
கைலயங்கிரியினிலே கங்கையில் மலர்ந்தவனே
கார்த்திகை பெண்களின் கரங்களில் வளர்ந்தவனே
பார்வதி கரத்தாலே ஓருருவாய் ஆனவனே
பார் வலம் வந்தவனே பழனியில் நின்றவனே
பார்வதி வேலாலே சூரனை வென்றவனே
பார்புகழ் பரங்கிரியில் அமர்ந்த சுந்தரனே