அருள்மிகு குன்றக்குடி குமரன்
குன்றக்குடி அமர்ந்த குமரனே குகனே
என்றும் உனைப்பணியும் எந்தனுக்கு அருள்வாயே
கன்றுக்கு இரங்கிடும் கறவைப் பசுபோலே
இன்றே வந்தெனக்கு இன்னருள் புரிவாயே
புனல்மதி சூடிய புண்ணியன் கண்ணிலே
கனலென வந்தவனே கார்த்திகைச் செல்வனே
வனமகள் வான்மகள் மனங்கவர் சுந்தரனே
கனவிலும் நீதானே கந்தனே கடம்பனே