அருள்மிகு கண்டி கதிர்வேலன்:
கண்டி கதிர்வேலனே கார்த்திகை பாலனே
கண்விழிப் பார்வையிலே காத்தருள் புரிபவனே
அண்ணாமலையினிலே அருணகிரிநாதருக்கு
பண்ணோடு உன்புகழ்பாட பரிந்தருள் புரிந்தவனே
வண்ணமயில் ஏறிவந்து விண்ணவரை மீட்ட
அண்ணலே அழகனே ஆறுபடை அமர்ந்தவனே
பண்டிதர் பாமரர் போற்றிடும் சுந்தரனே
எண்ணியதெல்லாம் தரும் எந்தாயுமானவனே