அருள்மிகு கந்தபெருமான்:
காத்திருக்க வைப்பதேனோ கந்தபெருமானே
காத்தருள் புரியவே காலமும் கரையுதே
தோத்திரம் அறியாமல் தொழுது நின்றேனே
பாத்திரம் பார்க்காமல் பரிந்தருள்வாயே
திருப்பரங்கிரிதனை வலமும் வந்தேனே
திருச்சீரலைவாயில் நீராடிப் பணிந்தேனே
திருவாவினன்குடியில் காவடி சுமந்தேனே
திருத்தணி மலையினிலே படிபூசை செய்தேனே
சுவாமிமலை மீதுறையும் சுவாமிநாதனே
சோலைமலை மேவிய சுந்தரனே குகனே
ஆறுமுக வேலவனே ஆதிசிவன் பாலகனே
வீறுகொண்ட முருகனே விரைந்தருள் புரிவாயே