அருள்மிகு மயிலம் முருகன்:
மயிலம் மீதுறையும் முருகனே வேலனே
மயிலேறியே வந்து மனங்கனிந்தருள்வாயே
மயிலாக மாறவே சூரனுக்கருள்செய்த
மயிலிறகு சூடும் மாயவன் மருகனே
வஞ்சகரை வீழ்த்தி வானவரை காத்து
குஞ்சரி கரம்பிடித்த குமரனே குகனே
சஞ்சலம் தீர்த்திடும் சண்முகசுந்தரனே
நெஞ்சமெல்லாம் நீயே தஞ்சமளிப்பாயே