அருள்மிகு சொக்கநாதர்:
சோம சுந்தரனே சொக்கநாதனே
கூடல் மதுரையிலே ஆடல் பலபுரிந்த
சாமகானமுடன் அனுதினம் உனைத்துதித்த
பாணன் புகழ்பரவ விறகுதனை சுமந்த
நரிபரி மாற்றம் செய்து பிட்டுக்கு மண்சுமந்து
வலைவீசி மீன்பிடித்து வளையல்களை விற்ற
ஆலவாய் நகர்காட்டி ஆனைக்கு கரும்பூட்டி
பாண்டியன் சுரம்தீர்த்து சங்கப்பலகை தந்த
வேதியன் தருமிக்கு பொற்கிழிதனையருளி
ஆனை பசுவுடனே நாகத்தையும் வதைத்த
நாரை குருவியுடன் பன்றிக்கு அருள்தந்து
மாணிக்கமும் விற்று இரசவாதம் செய்த
வேதப்பொருள் உரைத்து சித்திக்கும் சித்தராகி
வையம் செழித்திடவே வைகை நதி தந்த