அருள்மிகு மகாதேவன்
மான்விழி மங்கையுடன் மாமலை மீதுறை
மான் மழு ஏந்திய மகாதேவனே சரணம்
மான்மகள் வள்ளியின் மனங்கவர் முருகனை
வானவரைக் காக்க வழங்கிய வள்ளலே
மீன்விழி மாதுடன் மாமதுரை அமர்ந்த
மீன்வலை வீசிய மீனாட்சி சுந்தரனே
வான்மதி வாசுகி வார்சடை சூடிய
நான்மாடக்கூடலின் நாயகனே அருள்வாய்