சிவன்

அருள்மிகு சிற்சபேசன்:

பொற்பதம் கண்டேனே பொன்னம்பலத்தானே
நற்கதி அருள்வாயே நான்மறை நாயகனே

அற்புதம் புரியும் ஆனந்த கூத்தனே
சிற்சபேசனே சிவனே சிவகாமி நேசனே

விற்போர் புரிந்த விஜயனுக்கருளவே
மற்போர் புரிந்து மகிழ்வுடன் தழுவி
சொற்போர் புரிந்த சுந்தரர்க்கருளிய
கற்போர் ஏத்தும் கபாலி நாதனே

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.