அருள்மிகு ஆலவாய் அண்ணல்:
கிழவி வந்திக்கு கூலியாளாய் வந்த
அழகிய ஆலவாய் அண்ணலே அருள்வாய்
கிழவிக்கு பழம் தந்து தமிழினை சுவைத்த
பழனிமலை பாலனைப் பயந்த பரமனே
கிழவனாய் வந்து சுந்தரமூர்த்தியின்
வழக்கினை முடித்த வார்சடையோனே
உழவாரப்பணி செய்த அப்பருக்கருளிய
அழல் வண்ணா உன் கழல் பணிந்தேனே