சிவன்

அருள்மிகு கல்யாணசுந்தரர்:

பங்குனி உத்திரத்தில் பார்வதி கரம்பிடித்த
சங்கரனே உன்னை சரணடைந்தேனே

மங்கையொரு பாகனாய் மாமலை மீதுறையும்
கங்கை மதி சூடிய கல்யாணசுந்தரனே

சங்கம்வளர் மதுரையிலே சித்திரை உத்திரத்தில்
பங்கய கண்ணனின் பாசமிகு தங்கையாம்
அங்கயற்கண்ணிதன் கைத்தலம் பற்றிய
தங்கநிற மேனியனே தயைபுரிவாயே

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.