அருள்மிகு குளம்பிய நாதர், பாலையூர், நாகை மாவட்டம்:
இளம்பிறை அணிந்த ஈசனே உந்தன்
உளம்கனியவே ஓதி நின்றேனே
குளம்பிய நாதரே களிப்புடன் வாழவே
வளம் தருவாயே வார்சடை வள்ளலே
குளிரும் மார்கழி ஆதிரை நாளிலே
களிநடம் கண்டுன் கழல் பணிந்தேனே
எளியவர்க்கிரங்கும் ஏழைப்பங்காளனே
ஒளிமிகு சுந்தரனே அருள்புரிவாயே