அருள்மிகு ஏகாம்பரநாதர்,காஞ்சிபுரம்
ஏற்றமிகு வாழ்வு தரும் ஏகாம்பர நாதனே
போற்றிஉன் புகழ்பாடி பொற்பதம் பணிந்தேனே
நற்றாள் தொழுதிடும் நல்லடியார்க்கெல்லாம்
வற்றாத செல்வம் தரும் வார்சடையோனே
உற்றதுணை நீயென்று உன்னருள் பெற்றிடவே
சுற்றிஉனை வந்தேனே சோதியனே சுந்தரனே
நற்றவ முனிவரும் நான்மறையும் புகழும்
கொற்றவனே சிவனே கனிந்தருள் புரிவாயே