அருள்மிகு கந்தன்
கந்தனை தினமும் பாடி பணிவோமே
வந்த வினை நீங்கி வளம் பெறுவோமே
சுந்தர வேலனை சிந்தையில் வைத்து
சந்தங்கள் பாடிய தொண்டர் அடிபற்றி
நக்கீரர் நவின்ற ஆற்றுப்படை ஓதி
குமரகுரு தந்த வெண்பாவை சாற்றி
அருணகிரி அருளிய திருப்புகழும் பாடி
தேவராயன் பகர்ந்த கவசமும் ஜெபித்து