அருள்மிகு குருநாதசுவாமி, அந்தியூர்
குருநாதசுவாமியே குமரனேஉனைப் பணிந்தோம்
குலம் தழைக்க அருள்வாய் எங்கள்
குலதெய்வமே
அருவுருவாய் நின்ற அரனின் மறுவுருவே
அம்மையின் அருள்பெற்ற சக்தி வடிவேலனே
முந்தித் தவமிருந்து முன்னவர் போற்றிய
அந்தியூரை அடைந்துன் அடிமலர் தொழுதோமே
சந்தங்கள் பாடிஉந்தன் சன்னதியில் நின்றோமே
சுந்தரனே சுப்ரமண்யா கந்தனே காத்தருள்வாய்