அருள்மிகு பாலகுருநாத சுவாமி, அந்தியூர்
பார்வதி மைந்தனே பாலகுருநாதனே
பொழுது புலர்ந்தது எழுந்தருள்வாயே
பார்புகழும் உன்னைப் பாடவும் வாழ்த்தவும்
கார்த்திகை பெண்களும்
களிப்புடன் வந்தனரே
சேவலும் மயிலும்உன் சன்னதியில் நின்றிருக்க
ஆவுடன் ஆனையும் அழகுடன் காத்திருக்க
சுந்தர குமாரனே அந்தியூர் பாலனே
வந்தனை செய்தோமே எழுந்தருள்வாயே