ஹிரண்ய வர்ணுடு ஹாலாஸ்ய நாதுனிசுந்தரேஸ்வருனி சேவிம்ப ராரே சிரஸுலோ கங்கனு சந்ருனி தரிஞ்சினசாமகானப்ரியடு சோமசுந்தருனி சரஸிஜ நேத்ருடு சரஸிஜ வாஸுடுவெதிகினா கணலேனி விஸ்வேஸ்வரடுமாயம்ம மீனாக்ஷி மஹிமதோ பாலிஞ்சேதக்ஷிண மதுரலோ லீலலு சேஸின
குளிர்மதி தலைசூடி குளிர்பனி மலைமீதுகளிநடனம் புரியும் கூத்தனே அருள்வாயே குளிர்மதி முகத்தாலே கருணைமழை பொழியும்கிளிகரம் ஏந்திய கயல்விழி நாயகனே அவிர்பாகம் மறுத்த தட்சன் தலைகொய்தஅவிநாசி அப்பனே ஆலால சுந்தரனேபுவியிலே உனைப்போலே புரவலரும் உண்டோதவித்திடும் எந்தனுக்கு தயைபுரிவாயே
ஏற்றமிகு வாழ்வு தரும் ஏகாம்பர நாதனேபோற்றிஉன் புகழ்பாடி பொற்பதம் பணிந்தேனே நற்றாள் தொழுதிடும் நல்லடியார்க்கெல்லாம்வற்றாத செல்வம் தரும் வார்சடையோனே உற்றதுணை நீயென்று உன்னருள் பெற்றிடவேசுற்றிஉனை வந்தேனே சோதியனே சுந்தரனேநற்றவ முனிவரும் நான்மறையும் புகழும்கொற்றவனே சிவனே கனிந்தருள் புரிவாயே
கண்ணப்பனுக் கருளிய காளத்தி யப்பனேகண்ணுதல் கடவுளே காத்தருள் சுந்தரனே எண்கால் சிலந்தியும் அரவும் ஆனையும்விண்ணுல கடையவே இன்னருள் புரிந்தவனே பண்டரிநாதனும் பாரதி நேசனும்கண்டறியாத கண்ணாரமுதனேபெண்ணொரு பாகனே பிறையணி பரமனேபுண்ணிய மூர்த்தியே பூங்கழல் பணிந்தேனே
தேடிஉனைக் கண்டேனே தேனுபுரீஸ்வராபாடிஉனைப் பணிந்தேனே பரமனே அருள்வாயே நாடிவரும் அடியவர்க்கு நல்லருள் புரிந்தேகோடிநலம் கொடுப்பவனே கொன்றை அணிந்தவனே ஆடிடும்உன் பாதத்தை அம்பலத்தே தரிசித்தால்ஓடிடும் வினையாவும் உன்னருட் பார்வையிலேஈடிலா இறைவனே ஈசனே சுந்தரனேகேடிலா கல்வியும் செல்வமும் தருவாயே
இளம்பிறை அணிந்த ஈசனே உந்தன்உளம்கனியவே ஓதி நின்றேனே குளம்பிய நாதரே களிப்புடன் வாழவேவளம் தருவாயே வார்சடை வள்ளலே குளிரும் மார்கழி ஆதிரை நாளிலேகளிநடம் கண்டுன் கழல் பணிந்தேனேஎளியவர்க்கிரங்கும் ஏழைப்பங்காளனேஒளிமிகு சுந்தரனே அருள்புரிவாயே
பிறைசூடும் பெருமானே புலித்தோலை புனைவோனேபறைகொண்டு உன்னையே பாடி பணிந்தேனே மறைகளின் நாயகனே மாடையம்பதியோனேஉறைபனி மீதமர்ந்து உலகினை காப்பவனே கலைகளின் தலைவனே காலனை உதைத்தவனேஅலைகடல் எழுப்பிய ஆலத்தை உண்டவனேமலைமகள் மணாளனே மாலறியா மலையானேவலைவீசி மீன்பிடித்த சுந்தரனே அருள்வாயே
சிவனை நினை மனமே தினமே_ சதாசிவனை நினை மனமே அவனின்றி ஓரணுவும் அசையாதென்பதைகவனம் கொண்டே நீ காஞ்சி ஏகம்பனை தவமும் தானமும் தந்திடும் பலனையேஅவனை நினைத்தாலே அருள்புரிவானேசிவந்த நிறமுடைய சுந்தரன் பார்வையிலேநவக்கிரகங்களும் நன்மை செய்திடுமே
உண்ணாமுலை உடனுறை அண்ணாமலையேகண்ணார கண்டுனை கைதொழுதேனே கண்ணனும் அயனும் காணா ஜோதியேவிண்ணவர் போற்றிடும் விமலனே அருள்வாய் மண்ணுயிர்க்கெல்லாம் உணவினை அளித்துகண்ணின் மணியென காத்தருள்புரிபவனேவண்டார்குழலி விரும்பிடும் சுந்தரனேபண்ணிசைத்து உந்தன் பதம் பணிந்தேனே
வங்கக் கடல் நடுவே வைதேகி அருள் செய்தலிங்கத்தை தரிசிக்க தீவினை நீங்கிடுமே வங்கக் கடல்கடைந்த இராமனும் பூசித்ததங்கநிறத்தோனே தாண்டவராயனே திங்கள் தலைசூடி தீம்புனலும் தாங்கிஅங்கம் சரிபாதி அம்மைக்கு அருளியசங்கரனே உன்னை சரண் புகுந்தோமேஎங்களுக்கருள்வாயே எழில்மிகு சுந்தரனே