சிவன்

அருள்மிகு நெல்லையப்பர் (வேணுவனநாதர்), திருநெல்வேலி:

வேணுவனநாதனே வேதவிழுப்பொருளேதாணுவே உந்தன் திருவடியே சரணம் வேணுகோபாலனும் வேதியனும் தேடியும்காணுதற்கரிய காந்திமதி நாதனே வில்லை வளைத்த வேந்தனும் போற்றியதில்லை நாதனே தாமிர சபையோனேநெல்லையப்பனே நிமலனே சுந்தரனேஎல்லை இல் சோதியனே ஏழைஎனக்கருள்வாயே

சிவன்

அருள்மிகு தாயுமான சுவாமி, திருச்சிராப்பள்ளி:

சிராப்பள்ளி மேவிய சிவபெருமானேபராமுகம் காட்டாமல் பரிந்தருள்புரிவாயே சராசரம் எலாம் புரக்கும் பராபரமேமட்டுவார்குழலி மனங்கவர் மணாளனே மரவுரி தரித்த மன்னனும் போற்றியசரமலர் கொன்றை சூடிய சுந்தரனேதரணியை காத்திடும் தாயுமானவனேபரமனே உந்தன் பதமலர் பணிந்தேனே

சிவன்

அருள்மிகு கூத்தபிரான்;

அழைத்த போதே அருள்புரிபவனேகுழையணிந்தாடும் கூத்தபிரானே மழைமுகில் வண்ணனும் மலரவனும் காணவிழைந்தும் அறியாத விரிசடை சுந்தரனே பழவினை போக்கிடும் பாம்பணி கண்டனேகழலினைப் பணிந்தேனே காலபைரவனேஉழவும் தொழிலும் உலகினில் செழிக்கவேஅழல் வண்ணனே அருள் புரிவாயே

சிவன்

அருள்மிகு வைத்யநாத சுவாமி, வைத்தீஸ்வரன் கோயில்:

வைத்தியநாதனே வேத நாயகனேஐந்தெழுத்தோதி அடிபணிந்தேனே வைக்கத்தப்பனே ஐந்து முகத்தோனேதைலாம்பாள் மகிழ் சோமசுந்தரனே ஐயாறடைந்த அப்பர் பிரானுக்குகைலாசம் காட்டிய காமேஸ்வரனேபைந்தமிழால் உனைப் பாடிப் பணிந்தேனேவையத்தில் வாழ்வாங்கு வாழ வழி செய்வாயே

சிவன்

அருள்மிகு அப்பு லிங்கம், திருவானைக்காவல்:

ஆனைக்காவினிலே அப்பு லிங்கமாய்அற்புதக்காட்சி தரும் ஆண்டவனே சரணம் ஆனைக்கருள்செய்த அண்ணலுடனேஅகிலாண்டேஸ்வரி அருளாட்சி செய்திடும் நந்தி முன்னமர்ந்த நாயகன் உனைநாடிசந்திவேளையிலே சன்னதி வந்தேனேசந்திரன் சூடிய சோமசுந்தரனேவந்தித்தேன் உன்னை வரமருள்வாயே

சிவன்

அருள்மிகு கல்யாணசுந்தரர்:

பங்குனி உத்திரத்தில் பார்வதி கரம்பிடித்தசங்கரனே உன்னை சரணடைந்தேனே மங்கையொரு பாகனாய் மாமலை மீதுறையும்கங்கை மதி சூடிய கல்யாணசுந்தரனே சங்கம்வளர் மதுரையிலே சித்திரை உத்திரத்தில்பங்கய கண்ணனின் பாசமிகு தங்கையாம்அங்கயற்கண்ணிதன் கைத்தலம் பற்றியதங்கநிற மேனியனே தயைபுரிவாயே

சிவன்

அருள்மிகு சங்கரன்:

அங்கமெல்லாம் சிலிர்க்குதடி தோழிதங்கநிற மேனியனாம் சங்கரன் புகழ்கேட்டு அங்கத்திலே பாதி அன்னைக்கு அளித்தவனாம்பங்கய கண்ணனுக்கு சக்கரம் தந்தவனாம் ஆலம்தனை அருந்தி அண்டத்தை காத்தவனாம்பாலனை காக்கவே காலனை கடிந்தவனாம்ஆலவாய் நகரினிலே ஆடல்பல புரிந்துசீலமிகு அடியவர்க்கு அருளிய சுந்தரனாம்

சிவன்

அருள்மிகு கூடல் நாயகன்:

பாடல் மதுரையில் பிறவி எடுக்கவேகூடல் நாயகன் கருணை வேண்டுமே ஆடல்பலபுரிந்து ஆலாலசுந்தரன்அடியவர்க்கிரங்கி நடந்து வந்தருளிய கிழவிக்கு அருளவே கூலியாளாய் நடந்தான்வாணன் புகழ்பாட விறகுடனே நடந்தான்வளையல் விற்கவே வணிகனாய் நடந்தான்தருமிக்கருளவே புலவனாய் நடந்தான்

சிவன்

அருள்மிகு அருணாசல சிவன்:

அடியவர்க்கு அடியனாய் அருள்புரிபவனேஅடிமுடி அறியா அருணாசல சிவனே அடிநோக நடந்தாயே வந்திக்கருளவேஅடிநோக நடந்தாயே ஆரூர் தோழனுக்கே அடித்தானே பாண்டியன் முதுகிலே பிரம்பாலேஅடித்தானே அர்ச்சுனன் காண்டீப வில்லாலேஅடித்தானே சாக்கியன் அனுதினம் கல்லாலேஅடியெலாம் ஆடலென்று அறிவேனே சுந்தரனே

சிவன்

அருள்மிகு குற்றால நாதர்

கடல்சூழ் உலகினை காத்தருள் புரியவேவிடம்தனை குடித்த விரிசடையோனே கடல்நீர் வண்ணன் கரத்தினில் மின்னும்சுடர்ஆழி தந்த சுந்தர மூர்த்தியே கடல்நீர் அனைத்தும் குடிநீராக்கியகுடமுனி மகிழவே குற்றாலந்தனிலேபடமெடுத்தாடும் பன்னகம் அணிந்துநடம்புரிகின்ற நாதனே அருள்வாய்