முன்னம் செய்த தவப்பயனோ முத்துக்குமாரனேஉன்னடியை தொழுவதற்கு உத்தம பிறவி தந்தாய் என்னவரம் கேட்பதென்றே ஏதும் அறியேனேஎன்னருகே நீ இருந்தால் வேறேதும் வேண்டுமோ நின்னருளைப் பெறவே நித்தம் உன் புகழ்பாடிகுன்னக்குடி குன்றேறி காவடி ஏந்திஉன்சன்னதி வந்தேனே சண்முகசுந்தரனேஇன்னருள் புரிவாயே ஈசன் திருமகனே
விசாக நன்னாளிலே விண்ணவரை காக்கவிசுவநாதன் கண்மணியாய் வந்த சுந்தரனே விசாலாட்சி கரத்தாலே வீரவேல் பெற்றவனேவீரபாகு துணையோடு சூரனை வேன்றவனே மலரவன் அறியாத மந்திரம் சொன்னவனேமலர்மகள் மருகனே மலைதனைப் பிளந்தவனேமலர்முகம் காணவே மலையேறி வந்துனதுமலர்ப்பதம் பணிந்தேனே மனமகிழ்ந்தருள்வாயே
குழந்தை வேலாயுதனே குருபரனே உந்தன்கழல் பணிந்தேனே காத்தருள் சுந்தரனே மழபாடி மாணிக்கம் மகேசன் மைந்தனேகுழலூதி மனங்கவர்ந்த கண்ணன் மருகனே பழம் பெற வேண்டியே புவனம் வலம்வந்துபழனிமலையில் நின்ற பாலகுமாரனேபழமே நீயென்று பாடிய ஔவைக்குபழம் தந்த பாலகனே பைந்தமிழ் தந்தவனே
சக்தி வடிவேலனே சண்முகனே குகனேபக்தியுடனே உந்தன் பதமலர் பணிந்தேனே யுக்தியும் அறிவேனே உன் திருவருள் பெறவேமுக்தி தரும் மந்திரமாம் முருகா என்று உரைப்பதுவே கூலியாளாய் வந்த கூத்தன் மைந்தனேமாலிருஞ்சோலை உறை மாதவன் மருகனேவேலினாலே மலையைப் பிளந்த வீரனேசூலினி புதல்வனே சுந்தரகுமாரனே
வரமிய்யவய்யா வல்லி நாயகாதரணி லோ நாகு கதி வேறெவரய்யா சுரலுனி ரக்ஷிஞ்சி சூருனி சிக்ஷிஞ்ச்சினஸ்ரீ சுப்ரமண்யா சுந்தர குமாரா பவபயம் ஹரிஞ்சே பரமதயாளாஞானமுலிச்சே ஞானபண்டிதாவிவாஹம் ப்ராப்திஞ்சே வீரவிசாகாஐஸ்வர்யம் அந்திஞ்சேஅந்தரி பாலா
ப்ரதி கொண்டலபை கொலுவைவுண்டேபார்வதி நந்துனி பஜிம்பவே மனஸா ப்ரணவஸ்வரூபடு பாலகுருநாதடுபக்தவத்ஸலுடு பாலநேத்ரசுதடு வல்லிகாந்த்துடே வம்சவ்ருத்திகரடுதேவசேனாபதே தேவாதிதேவுடுசண்முகசுந்தருடே சிந்த்த தீர்த்துடுகார்த்திகேயடே கருணாசமுத்ருடு
கோடி கதிரவன் கூடினாற்போலவேகாட்சி அளித்திடும் கந்தனே அருள்வாயே நாடி வந்துனை நயந்திடும் அடியவர்க்குநல்லருள் புரிந்திடும் நல்லூர் கந்தனே குஞ்சிதபாதனுக்கு குருவாய் ஆனவனேஅஞ்சுகம் ஏந்திய அன்னையின் மைந்தனேகுஞ்சரி பாகனே குமரனே குகனேமஞ்சுளவல்லியின் மனங்கவர் சுந்தரனே
வண்ணமயில் ஏறியே வையகம் வலம்வந்தஅண்ணலே ஆறுமுகா அருள்புரிவாயே உண்ணாது உறங்காது ஊதிமலை ஏறிஉனைகண்ணாரக் கண்டேனே கந்தனே சுந்தரனே கண்ணிமை மூடாத கந்தனை கண்டாலேபண்ணிய பாவமும் பறந்தோடிப் போகுமேபுண்ணியம்சேருமே புகழ்வந்து கூடுமேஎண்ணியதெல்லாமே ஈடேறும் தன்னாலே
அந்தி நிறத்தோனே ஆறுமுக வேலவனேஇந்திரன் மருமகனே இருபதம் பணிந்தேனே சந்திரன் சூடிடும் சங்கரன் மகிழவேமந்திரப் பொருள் உரைத்த முருகனே குகனே விந்திய மலையினை அடக்கிய அகத்தியர்க்குமுந்தி தமிழ் தந்த கந்தனே சுந்தரனேகுந்தியின் மைந்தரை காத்தவன் மருகனேவந்தித்தேன் உன்னை வரமருள்வாயே
மயிலம் மீதுறையும் முருகனே வேலனேமயிலேறியே வந்து மனங்கனிந்தருள்வாயே மயிலாக மாறவே சூரனுக்கருள்செய்தமயிலிறகு சூடும் மாயவன் மருகனே வஞ்சகரை வீழ்த்தி வானவரை காத்துகுஞ்சரி கரம்பிடித்த குமரனே குகனேசஞ்சலம் தீர்த்திடும் சண்முகசுந்தரனேநெஞ்சமெல்லாம் நீயே தஞ்சமளிப்பாயே