முருகன்

அருள்மிகு சிங்காரவேலர், திருமயிலை:

மயிலாகவே வந்து மலைமகள் பூசித்தமயிலையம்பதி வாழும் மயில்வாகனனே கயிலை நாதன் கண்ணிலே தோன்றியசுந்தர பாலனே சிங்காரவேலனே ஆனைக்கருள்செய்த அனந்தன் மருகனேஆனைத்தோலணிந்த அரனின் மைந்தனேஆனை வளர்த்த அணங்கின் மணாளனேஆனைமுகன் அருளாலே மானை மணந்தவனே

முருகன்

அருள்மிகு கந்தையன்:

என்று எனக்கு அருள்வாயோ எந்தையே கந்தையாகன்று என காத்திருந்தேன் கனிந்தருள் சுரப்பாயே அன்றாடம் உன்நாமம் ஆயிரம் உரைத்தேனேஒன்றேனும் உன்செவியில் ஒலிக்கவும் இல்லையோ குன்றெலாம் ஏறிவந்து குமரா உனைக்கண்டுமன்றாடி நின்றுமே மனமும் இரங்கலையோமன்றாடி சுந்தரன் மைந்தனே முருகைய்யாஇன்றேனும் எந்தனுக்கு இன்னருள் புரிவாயே

முருகன்

அருள்மிகு செங்கதிர் வேலன்:

செய்வதொன்று அறிவேனே செங்கதிர் வேலனேமெய்யன்புடனே உன் மலரடி தொழுவதே உய்வதற்கு உனையன்றி உறுதுணை எவரைய்யாஐயமும் ஏதைய்யா ஆறுமுக வேலைய்யா பால் வண்ணன் பாலனே பன்னிரு கையோனேமாலவன் மருகனே மந்திரப் பொருளோனேவேலுடன் மயிலேறி வலம்வந்த சுந்தரனேகோலுடன் மலையேறி காட்சிதரும் கந்தனே

முருகன்

அருள்மிகு கந்தபெருமான்:

காத்திருக்க வைப்பதேனோ கந்தபெருமானேகாத்தருள் புரியவே காலமும் கரையுதே தோத்திரம் அறியாமல் தொழுது நின்றேனேபாத்திரம் பார்க்காமல் பரிந்தருள்வாயே திருப்பரங்கிரிதனை வலமும் வந்தேனேதிருச்சீரலைவாயில் நீராடிப் பணிந்தேனேதிருவாவினன்குடியில் காவடி சுமந்தேனேதிருத்தணி மலையினிலே படிபூசை செய்தேனே சுவாமிமலை மீதுறையும் சுவாமிநாதனேசோலைமலை மேவிய சுந்தரனே குகனேஆறுமுக வேலவனே ஆதிசிவன் பாலகனேவீறுகொண்ட முருகனே விரைந்தருள் புரிவாயே

முருகன்

அருள்மிகு கண்டி கதிர்வேலன்:

கண்டி கதிர்வேலனே கார்த்திகை பாலனேகண்விழிப் பார்வையிலே காத்தருள் புரிபவனே அண்ணாமலையினிலே அருணகிரிநாதருக்குபண்ணோடு உன்புகழ்பாட பரிந்தருள் புரிந்தவனே வண்ணமயில் ஏறிவந்து விண்ணவரை மீட்டஅண்ணலே அழகனே ஆறுபடை அமர்ந்தவனேபண்டிதர் பாமரர் போற்றிடும் சுந்தரனேஎண்ணியதெல்லாம் தரும் எந்தாயுமானவனே

முருகன்

அருள்மிகு செந்தூர் வேலவன்:

தாமதம் செய்வதேனடி தோழி எனக்குதயைபுரிய இன்னும் தணிகை வேலனவன் சாமத்திலே விழித்து சஷ்டி நோன்பிருந்துசங்கரன் மைந்தனை சதா நினைத்துமே அறுபடை வீடும் சென்று வந்தேனடிகாவடி பலவும் கொண்டு சென்றேனடிவேண்டுதல் யாவும் வேண்டி நின்றாலுமேசெந்தூர் தனில் வாழும் சுந்தர வேலனவன்

முருகன்

அருள்மிகு குன்றக்குடி குமரன்

குன்றக்குடி அமர்ந்த குமரனே குகனேஎன்றும் உனைப்பணியும் எந்தனுக்கு அருள்வாயே கன்றுக்கு இரங்கிடும் கறவைப் பசுபோலேஇன்றே வந்தெனக்கு இன்னருள் புரிவாயே புனல்மதி சூடிய புண்ணியன் கண்ணிலேகனலென வந்தவனே கார்த்திகைச் செல்வனேவனமகள் வான்மகள் மனங்கவர் சுந்தரனேகனவிலும் நீதானே கந்தனே கடம்பனே

முருகன்

அருள்மிகு சரவணன்:

கந்தன் அருள் பெறவே காத்திருக்க வேண்டாமேவந்தனை செய்தாலே தந்திடுவான் அக்கணமே அந்தரியும் சுந்தரனும் அருளிய பாலனையேஎந்தக் கணம் நினைத்தாலும் எழுந்தோடி வருவானே சந்ததிகள் தருவானே சரவணா என்றாலேமந்தமதி களைவானே மால்மருகா என்றாலேவந்தவினை விலகிடுமே வடிவேலா என்றாலேகுந்தகம் வாராதே குகா குகா என்றாலே

முருகன்

அருள்மிகு விசாகன்:

வைகாசி திங்களிலே விசாக நன்னாளிலேகைலாச நாதனின் கண்ணிலே வந்தவனே கைலயங்கிரியினிலே கங்கையில் மலர்ந்தவனேகார்த்திகை பெண்களின் கரங்களில் வளர்ந்தவனே பார்வதி கரத்தாலே ஓருருவாய் ஆனவனேபார் வலம் வந்தவனே பழனியில் நின்றவனேபார்வதி வேலாலே சூரனை வென்றவனேபார்புகழ் பரங்கிரியில் அமர்ந்த சுந்தரனே

முருகன்

அருள்மிகு வடிவேலன்:

விரைந்து நீ வருவாயே சுந்தர வடிவேலாகரைந்துனை அழைத்தேனே கலியுக வரதனே திரை கடலோடியே திரவியம் தேடியேநரை விழும் வரையிலே நானுனை மறந்தேனே வரைமுறை இன்றியே வாழ்ந்து வந்தேனேநுரைகடல் வண்ணன் நாரணன் மருகனேஅரைமதி சூடிய அண்ணலின் மைந்தனேதிரையினை நீக்கியே திருவருள் புரிவாயே