முருகா முருகா என்று முழங்கினாலேஅருகே வந்து அவனும் அருள்புரிவானே குமரா குமரா என்று கூவிடுவோமேசமராபுரி வாழும் சண்முக நாதனை கலியுக வரதனும் கார்த்திகேயனேவலிமை தருவதும் வடிவேல் அழகனேசந்ததிகள் தரும் சுந்தரன் அவனேஎந்த வேளையிலும் கந்தன் வருவானே
குறமகள் கொஞ்சிடும் குமரனே முருகாகெஞ்சி உனை அழைத்தும் கேளாதிருப்பதென்ன மறவாமல் உன்னை மனதால் நினைத்தேனேமால்மருகா குஹா மனம் இரங்காயோ வறுமை நீங்கியே வளமுடன் வாழவும்உறுபிணி இலாத உடல்நலம் பேணவும்அறுபடை முருகா உன் ஆறெழுத்தோதினேன்சிறுவாபுரி முருகா சுந்தரனே அருள்வாய்
தருணம் வரவில்லையோ தாமதமும் ஏனோதிருத்தணி மலையமர்ந்த திருமுருகா இன்னும் கருமுகில் வண்ணன் மருகனே முருகாகுருவுருவாய் வந்து திருவருள் புரியவே அருணகிரிக்காகவே அருணை அடைந்தாயேகுருபரன் குறைதீர்க்க கடலோரம் நின்றாயேஅருந்தமிழ் அவ்வையுடன் அளாவிடச் சென்றாயேகுருமணியே சுந்தரா கருணை காட்டவே
ஆதரிப்பார் எவரைய்யா ஆறுமுக வேலவனேபேதமின்றி ஆதரிக்க பெருமானே உன்னையன்றி சேதமின்றி சூரனையே சேவலும் மயிலுமாக்கிநாதனேநீ ஆதரித்து நல்லருள் புரிந்தாயே வாதமாதி நோய்கள் ஏதும் வந்தணுகா வண்ணம்சோதனைகள் ஏதுமின்றி சுந்தரமாய் வாழ்ந்திடவேகாதல்மிகு வள்ளியுடன் காட்சி தரும் கதிர்வேலாபாதமலர் பணிந்தேனே பரிவுடன் அருள்வாயே
பாராமுகம் ஏனைய்யா பரங்குன்றவாசனேஓராறு முகத்தினிலே ஒருமுகம் பார்க்காதோ ஊரார் சொல்கேட்டு ஓடோடி வந்தேனேஆராவமுதனே அடிமலர் பணிந்தேனே தீராத வினையாவும் தீர்ந்திடும் என்றாரேசேராத செல்வமெலாம் சேர்ந்திடும் என்றாரேசூராதியரை வென்ற சுந்தர வடிவேலாநாராயணன் மருகா நல்லருள் புரிவாயே
திருப்புகழ் போதுமே இருமைக்கும் இன்பம் தரும்அருட்பெருங்கடலாம் ஆறுமுகனைப் பாடும் இருமாதின் மணவாளன் திருமுருகன் அருளாலேஅருணகிரி அருளிய அற்புத பாமாலை திருமணம் நிகழவும் கரு உருவாகவும்பெருஞ்சிறப்புடனே பாரினில் வாழவும்ஒருமனதுடனே ஓதுவார் தமக்குகருணை புரியும் கந்தனின் சுந்தர
தந்தையின் கண்ணிலே தணலாய் வந்தனைகங்கையின் குளிர்ச்சியால் அங்கம் மலர்ந்தனைகார்த்திகைப் பெண்களின் கரங்களில் வளர்ந்தனைதாயின் அணைப்பிலே சேயாய் சேர்ந்தனை பிரணவப் பொருளினை பரமனுக்குரைத்தனைசூரனை வதைத்து சுரர்களை காத்தனைவாசவன் மகளையே வலக்கரம் பிடித்தனைகுறமகள் வள்ளியை கொஞ்சி கவர்ந்தனை தமிழ் மூதாட்டியின் தமிழைரசித்தனைதிருப்புகழ் பாடவே அருணகிரிக்கருளினைகுருபரன் குரல் கேட்க குரலைக் கொடுத்தனைஅன்பருக்கருளவே அறுபடை அமர்ந்தனை
பழனி மலைமீது பண்டாரமாய் நின்றஅழகனே உந்தன் கழல் பணிந்தேனே குழந்தை வேலனே குன்றுதோறாடும்அழல்வண்ணனே அருள்புரிவாயே பழவினை தீர்த்து பண்பும் ஞானமும்மழலைச் செல்வமும்மட்டிலா மகிழ்ச்சியும்சுழலும் உலகிலே சுந்தரா உனைப்போலேவழங்கிடும் தெய்வம் வேறெவரய்யா
மாமறை போற்றிடும் மலைமகள் மைந்தனேகுன்று தோறும் நின்ற குமரனே கேளாயோ மாமனோ வெண்ணெய்க்கு மாடுகளை மேய்த்தானேதந்தையோ பிட்டுக்கு மண்ணைச் சுமந்தானே பெருத்த வயிறு டைய பெரியவன் தம்பியேதேனுடன் தினைமாவும் தேடிவந்துண்ணவேகுறமகள் வள்ளியை காதல் புரிந்தாயேகந்தா உன் கதைஇதுவே சுந்தரா அறிவோமே
பச்சைமயில் ஏறியே பறந்தோடி வருவானேஉச்சிமலை முருகனை உருகியே அழைத்தாலே பச்சைநிற வள்ளிதன் காதல் மணாளனாம்வச்சிரம் ஏந்திய வாசவன் மருகனாம் பச்சை திருமேனி பரந்தாமன் மருகனாம்அச்சது பொடிசெய்த ஆனைமுகன் தம்பியாம்சச்சிதானந்தனின் சுந்தர குமாரனாம்இச்சைகளை அறிந்து இன்னருள் புரிபவனாம்