முருகன்

அருள்மிகு வேலன்:

பாரினிலே கண்டதில்லை யாரிடமும் கேட்டதில்லைவாரித்தரும் வள்ளலான வேலனைப்போல் வேறொருவர் மாரிதரும் நீர் போலே மக்கள் மனம் குளிரகோரிடும் வரமெல்லாம் கொடுத்து மகிழ்வானே பரமனின் மைந்தனாம் பார்வதி பாலனாம்சுரர்களை காத்திடவே சூரனை வென்றவனாம்சரவணபவ குகனை சண்முகசுந்தரனைசரண்புகுந்தாலே சகலமும் தருவானே

முருகன்

அருள்மிகு ஆறுமுக வேலன்:

ஆலோசனை ஏனோ ஆறுமுக வேலா உன்காலைப் பிடித்திருக்கும் பாலன் எனக்கருள மாலோலன் மருகனே மந்திரப் பொருளோனேசூலபாணி மகிழ் சுந்தர குமாரனே காலனை உதைத்த கண்ணுதற் கடவுளைபட்டருக்கருளிய பரமேஸ்வரியைஆனைக்கு ஓடிய ஆராவமுதனைவேலாநீ அறியாயோ காலத்தே வருவாயே

முருகன்

அருள்மிகு செந்தூர் முருகன்:

அலைவாயுகந்த ஆறுமுகவேலவனைதலைமுறை தோறுமே தாள் பணிவோமே அலைமகள் உடனுறை அரங்கனின் மருகனாம்கலைப்பிறை சூடிய சுந்தரன் மைந்தனாம் அலைகடலாடியே ஆலயம் வலம்வந்துமலைமகள் மைந்தனை மனமுருகித் தொழுதுஇலை நீறணிந்தாலே இனிதே நீங்கிடுமேதலைமுதல் கால்வரை தாக்கிடும் பிணிகளுமே

முருகன்

அருள்மிகு கதிர்வேல் முருகன்:

கிரிமகள் மைந்தனே கந்தனே சுந்தரனேகரிமுகன் சோதரனே காத்தருள் புரிவாயே கிரிதரன் மருகனே கார்த்திகேயனேபுரிசடை பரமனின் புதல்வனே குகனே கிரிதனை தகர்த்த கங்கை பாலனேஅரிமுகனை அழித்த ஆறுமுக வேலவனேவரிவளை அணிந்த வள்ளி மணாளனேகரிமகள் கரம்பிடித்த கதிர்வேல் முருகனே

முருகன்

அருள்மிகு வேலன்:

வெட்சி மலர் சூடும் வேலனே முருகாரட்சித்தருள்வாயே ரஞ்சனி மைந்தனே தட்சிணாமூர்த்திதன் தனயனே குகனேதேவர்களை காத்த குஞ்சரி பாகனே தாரகனை வதைத்த தீரனே வீரனேகீரனுக்கருளிய கார்த்திகை பாலனேசீரலைவாய் உறை சண்முகசுந்தரனேஆரமுதே உந்தன் அடிமலர் பணிந்தேனே

முருகன்

அருள்மிகு முருகன், திருப்பரங்குன்றம்:

குமரனை காணவே குன்றம் வாருங்கள்நமக்கருள் புரியவே அமர்ந்திருக்கும் அழகன் சமரம் புரிந்து சூரனை வென்றுஅமரர் தலைவனின் குமரியை மணந்த விமலன் விழியிலே வந்த சுந்தரனாம்இமயவள் கரத்திலே இணைந்த பாலனாம்கமலக்கண்ணனின் கண்கவர் மருகனாம்கமலவன் மைந்தன் குஞ்சரி உடனுறை

முருகன்

அருள்மிகு முருகன், திருத்தணி:

வடிவேல் முருகனே வாசவன் மருகனேஅடிமலர் பணிந்தேனே அருள்புரிவாயே முடிமேல் கங்கையும் மதியும் சூடியஅடிமுடி அறியா அண்ணலின் மைந்தனே படிபூசை புரியவே புத்தாண்டு தோறும்துடிப்புடன் வந்தேனேதணிகை வேலவனேகொடியிடை வள்ளி குஞ்சரி மணாளனேகடிமலர் சூடிய கந்தனே சுந்தரனே

முருகன்

அருள்மிகு திருத்தணி முருகன்:

குலதெய்வமே குமரா குருநாதனே உன்னைவலம்வந்து தொழுதேனே வரம் தருவாயே வலமும் இடமும் வள்ளியும் குஞ்சரியும்மலருடனே நிற்க மகிழ்வுடன் காட்சிதரும் ஜலந்தரனை அழித்த ஜடாதரன் மைந்தனேஉலகநாயகியின் உத்தம குமாரனேதலமதில் அழகான தணிகை மீதமர்ந்துகலங்கிடும் பக்தரைக் காத்திடும் சுந்தரனே

முருகன்

அருள்மிகு ஆறுமுகன்:

ஆதாரம் நீயெனவே ஆறுமுகனே உந்தன்பாதாரவிந்தமே போற்றிப்பணிந்தேனே கேதாரநாதனின் கண்ணிலே வந்தவனேவேதாகம ஞான விநோதனே முருகா கோதானம் கோடியே கொடுத்த பலனையேநாதா உன் நாமம் நவிலவே தருபவனேவாதாபி கணபதியின் சோதரனே சுந்தரனேகாதாலேஉன் புகழை கேட்டாலே அருள்பவனே

முருகன்

அருள்மிகு செந்திலாண்டவர்:

சந்தமும் வேண்டுமோ சாகித்யம் வேண்டுமோகந்தனருள் பெறவே கடுந்தவம் வேண்டுமோ சுந்தரன் மைந்தனை சிந்தையிலே வைத்துஎந்தாய் என்றாலே தந்தேன் என்பானே தந்தைக்கு குருவான தனயனை நினைத்தாலேவிந்தைகள் புரிந்து வளம்பெறச் செய்வானேசெந்தமிழ் கடவுளாம் செந்திலாண்டவனைவந்தனை செய்தாலே வழி பிறந்திடுமே