சூராதி சூரனே சுந்தரா கண் பாராய்வீராதி வீரனே வேலனே நீ வாராய் பாராதிருப்பதேனோ பதமலர் பணிந்துமேவாராதிருப்பதேனோ வண்ணமயில் இருந்துமே கண்கண்ட தெய்வமாய் கலியுக வரதனாய்பண்ணிசை பாவலர் பாடியே புகழ்ந்தாரேமண்ணளந்தான் மருகனே மனமிரங்கிடுவாயேவேண்டிடும் வரங்களையே வேலனே தருவாயே
விந்தை பலபுரிந்து வினைகளை தீர்த்திடும்கந்தையனே உன்னை வந்தனை செய்தனே எந்தையும் தாயும் என்றுமே நீயென்றுசிந்தையில் வைத்துன் சீரடி பணிந்தேனே திக்கிலா அடியவர்க்கு துணை யாகவே நிற்கும்சிக்கல் சண்முகனே சிங்கார வேலனேசொக்கனின் திருமகனே சுந்தர வடிவேலாஇக்கணமே வந்துநீ இன்னருள் புரிவாயே
வள்ளி குறமகளை வாரணம் துரத்தவேஅள்ளி அணைத்திட்ட ஆறுமுகனே அருள்வாய் துள்ளி வரும் வேலாலே துன்பங்களை போக்கும்வள்ளிமலை முருகா வானவர் படைத்தலைவா கள்ளமில்லாமலே கருத்துடன் நாளுமேஉள்ளம் உருகியே உன்னடி தொழுதாலேவெள்ளமென செல்வமும் வேண்டிடும் வரமுமேவள்ளலே தருவாயே வடிவேல் சுந்தரனே
வல்லக்கோட்டை உறை வடிவேல் முருகனேவல்வினை நீக்கியே வரம் அருள்வாயே வல்லப கணபதி சுந்தர சோதரனேவில்வம் விரும்பிடும் விமலன் மைந்தனே மல்லரை மாய்த்த மாயவன் மருகனேஅல்லும் பகலும் உந்தன் அடிபணிந்தேனேகல்வி செல்வமுடன் கீர்த்தியுடன் வாழவே
சரவணபவ குகனே சண்முகனே உன்னைசரண் புகுந்தேனே வரம் அருள்வாயே சரவணப் பொய்கையில் நீராடி உன்னைபரங்கிரியிலே கண்டு பரவசமடைந்தேனே சிரம் நான்குடைய பிரமனை கடிந்தசிரம் ஐந்துடைய பரமனிடம் உதித்தசிரம் ஆறுடைய சுந்தர குமாரனேசிரம் குவித்துனை கரம் தொழுதேனே
முருகனை நினை மனமே தினமேகருணையே வடிவான கதிர்வேல் கந்தனை ஒருதரம் குகனையே ஒருமுகமாய் நினைக்கஅரும்பிணி யாவுமே அருகினில் வாராதே அருள்தரும் அரன்மகனை அனுதினம் நினைத்தாலேதிருமகள் கலைமகள் தேடிவந்தருள்வாரேதருமமும் தானமும் தான் செய்த பலனையேதருவானே சுந்தரன் திருவடி நினைக்கவே
குருநாதனே என் குலதெய்வமேகுமரகுரு போற்றும் குமரேசனே செந்தூர் தனில் மேவும் செங்கல்வராயனேசீரலைவாயினில் சிங்காரவேலனே ஆலால சுந்தரன் அழகுத் திருமகனேஅம்பிகை பாலனே அழகர் மருகனேசூரனை வென்ற வள்ளி மணாளனேஅருணகிரிக்கருளிய அன்பருக்கு அன்பனே
நினைவெல்லாம் நீதானே நீலமயில் வாகனனேஉனையன்றி எனக்கருள எவருண்டு உலகிலே வினை நீங்க வேலுண்டு வரம் தர நீயுண்டுகனவிலும் உனை மறவேன் கார்த்திகை பாலனே பாலோடும் பழமோடும் காவடி ஏந்தி நின்பால்முகம் காணவே பழனிக்கு வந்தேனேபாதி மதி சூடும் சுந்தரன் மைந்தனேபாமர நேசனே பரிவுடன் அருள்வாயே
குன்றுதோறாடும் குமரனின் பெயரை
அன்றாடம் சொன்னாலே அற்புதம் நிகழுமே
அந்தியூரில் அருள்புரியும் எங்கள் குருநாதனே
காமாட்சி வரதனுடன் காட்சி தந்தருள்பவனே