சிவன்

அருள்மிகு சாம்ப சதாசிவன்:

சடைமுடி சுந்தரனே சாம்ப சதாசிவனேஅடைக்கலம் தந்தெனக்கு அருள் புரிவாயே விடை மீதேறியே வீதிவலம் வந்துகடைக்கண் நோக்கியே கருணை புரிகின்ற ஆழி சூழ் உலகினை அருள்வலம் வருகையில்காழியூர் பிள்ளைக்கு கனிவுடன் அருளியஊழிமுதல்வனே உமையொரு பாகனேஏழிரண்டுலகிற்கும் எழுந்தருள் புரியும்

சிவன்

அருள்மிகு கபாலீஸ்வரர்

மயிலைலே மேவும் கயிலை நாதனேகை கூப்பித் தொழுதோமே கருணை புரிவாயே பயிரெல்லாம் செழிக்க பாரினில் அறம் தழைக்கஉயிரெல்லாம் காத்திடவே உற்ற மருந்தருள்வாயே கற்பகவல்லியின் காதல் மணாளனேவாயிலார் மனக்கோயில் வழிபடு சுந்தரனேபூம்பாவைக் கருளிய பிள்ளையின் தலைவனேபங்குனியில் விழா காணும் கபாலிநாதனே

சிவன்

அருள்மிகு ஆலவாய் அண்ணல்:

குலமொன்றில்லாத கூத்தனே எந்தன்குலதெய்வம் நீயே காத்தருள்புரிவாயே அலகில் சோதியனே ஆலவாய் அண்ணலேஉலகில் உயிர்க்கெலாம் உணவளிப்பவனே வலதுபதம் தூக்கி வெள்ளியம்பலத்திலேசலங்கை அணிந்து சதிராடும் சுந்தரனேமலருடன் கிளிஏந்தும் மங்கை மணாளனேகுலச்சிறைக்கருளிய கண்ணுதற்கடவுளே

சிவன்

அருள்மிகு சிவன்;

ஆலின் கீழமர்ந்த ஆலால சுந்தரனேபாலித்தருள்வாயே பரமதயாளனே ஆலிலைக்கண்ணனும் அயனும் அறியாதசூலினி மணாளனே சூலாயுத பாணியே காலினால் முயலகனை காலனை கடிந்தவனேகூலிக்கு மண் சுமந்த கூடல் நாயகனேவாலியை வதைத்த வேந்தனும் வணங்கியவேலியாய் நின்ற வேணுவனநாதனே