அருள்மிகு ஆறுமுகன்:
ஆதாரம் நீயெனவே ஆறுமுகனே உந்தன்
பாதாரவிந்தமே போற்றிப்பணிந்தேனே
கேதாரநாதனின் கண்ணிலே வந்தவனே
வேதாகம ஞான விநோதனே முருகா
கோதானம் கோடியே கொடுத்த பலனையே
நாதா உன் நாமம் நவிலவே தருபவனே
வாதாபி கணபதியின் சோதரனே சுந்தரனே
காதாலேஉன் புகழை கேட்டாலே அருள்பவனே