அருள்மிகு ஆறுமுகவேலன்
குறிஞ்சி தலைவனடி
குறத்தி மணாளனடி
காத்தருள் புரிவானடி கிளியே
கார்த்திகைச் செல்வனடி கிளியே
கார்த்திகைச் செல்வனடி
அறிந்தறியாமல் செய்த
பிழைகள் பொறுத்தென்மீது
அருளைப் பொழிவானடி கிளியே அம்பிகை பாலனடி கிளியே
அம்பிகை பாலனடி
பிரம்மனும் அறியாத பிரணவ பொருளினையே பரமனுக்குரைத்தானடி கிளியே பாலகுருநாதனடி கிளியே பாலகுருநாதனடி
சுடர் வண்ணன் சுடரில்வந்து சூரனை வதம் செய்து
சுரபதியை மீட்டானடி கிளியே சுந்தர குமாரனடி கிளியே சுந்தர குமாரனடி
பொன்னும் பொருளும் தந்து
புத்திரப்பேறும் தரும்
பொன்மனச்செம்மலடி
கிளியே
பொன்வண்ணன் மைந்தனடி
கிளியே
பொன்வண்ணன்
மைந்தனடி
எண்ணும் எழுத்தும் தந்து
கண்ணின் மணியாய் காத்து
பேரருள் புரிவானடி
கிளியே
கார்வண்ணன் மருகனடி கிளியே
கார்வண்ணன் மருகனடி
வள்ளி தெய்வானையுடன் வண்ணமயில் ஏறிவந்து
வரங்களை தருவானடி
கிளியே
வாசவன் மருகனடி கிளியே
வாசவன் மருகனடி