அருள்மிகு ஆறுமுக வேலவன்:
உனையே நினைந்து உருகிடும் எனையே
நினைவில் கொள்வாயே நீலகண்டன் மைந்தனே
அணை மடை திறந்த ஆற்று வெள்ளம் போலே
அருளைத் தந்திடும் ஆறுமுக வேலவனே
அகத்திய முனிவருக்கு அருந்தமிழும் தந்து
குமரகுரு தாசருக்கு உபதேசமும் செய்து
கச்சியப்பரும் உனது காவியம் பாடவும்
கனிந்தருள் புரிந்த கந்தனே சுந்தரனே