அருள்மிகு உச்சிமலை முருகன்:
பச்சைமயில் ஏறியே பறந்தோடி வருவானே
உச்சிமலை முருகனை உருகியே அழைத்தாலே
பச்சைநிற வள்ளிதன் காதல் மணாளனாம்
வச்சிரம் ஏந்திய வாசவன் மருகனாம்
பச்சை திருமேனி பரந்தாமன் மருகனாம்
அச்சது பொடிசெய்த ஆனைமுகன் தம்பியாம்
சச்சிதானந்தனின் சுந்தர குமாரனாம்
இச்சைகளை அறிந்து இன்னருள் புரிபவனாம்