அருள்மிகு ஊதிமலை முருகன்:
வண்ணமயில் ஏறியே வையகம் வலம்வந்த
அண்ணலே ஆறுமுகா அருள்புரிவாயே
உண்ணாது உறங்காது ஊதிமலை ஏறிஉனை
கண்ணாரக் கண்டேனே கந்தனே சுந்தரனே
கண்ணிமை மூடாத கந்தனை கண்டாலே
பண்ணிய பாவமும் பறந்தோடிப் போகுமே
புண்ணியம்சேருமே புகழ்வந்து கூடுமே
எண்ணியதெல்லாமே ஈடேறும் தன்னாலே