அருள்மிகு ஓதிமலை முருகன்
ஆதிஅருணாசலத்தில் அருணகிரிக்கருளியவா
ஓதிஉன்னை அழைத்தேனே ஓடிவந்தருள்வாயே
சோதிவடிவானவனின் சுந்தர திருமகனே
ஆதிசக்தி மனமகிழ அரக்கனை அழித்தவனே
வேதியரும் போற்றிடும் வேதவிழுப்பொருளே
ஆதிசேஷன் மீதுறையும் அரங்கனின் மருகனே
மேதினியில் அடியவர்க்கு வேண்டும் வரமரளும்
ஓதிமலை முருகனே காத்தருள வாருமய்யா