முருகன்

அருள்மிகு கந்தகிரி கந்தன்

அத்திமுகன் தம்பியே ஆதிசக்தி மைந்தனே
இகபர சுகமருளும் ஈராறு கரத்தோனே

உலகளந்தோன் மருகனே ஊதிமலை வேலவனே
எழில்மிகு சுந்தரனே ஏரகத்தமர்ந்தோனே

ஐயப்பன் சோதரனே ஒளிமயமானவனே
ஓதும் அடியவர்க்கு ஔஷதம் ஆனவனே
கந்தகிரி கடம்பனே சம்புகுமாரனே
தங்கமயில் ஏறி வந்து பக்தர்களை காப்பவனே

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.