அருள்மிகு கந்தன்:
கேட்கவும் வேண்டுமோ கந்தனே உன்னிடம்
கருணை புரி என்று உருகி உனை நினைத்து
கேட்காமலே தரும் வள்ளலும் நீயென்றே
பாட்டெழுதி வைத்தாரே பண்டிதரும் அன்றே
முருகா என்றே ஒருமுறை அழைத்தாலே
இருகரம் கூப்பியே திருவடி பணிந்தாலே
குருவாகவே வந்து அருள்புரிவாய் என்ற
அருணகிரிக்கருளிய ஆறுமுக சுந்தரனே