அருள்மிகு கந்தையன்:
என்று எனக்கு அருள்வாயோ எந்தையே கந்தையா
கன்று என காத்திருந்தேன் கனிந்தருள் சுரப்பாயே
அன்றாடம் உன்நாமம் ஆயிரம் உரைத்தேனே
ஒன்றேனும் உன்செவியில் ஒலிக்கவும் இல்லையோ
குன்றெலாம் ஏறிவந்து குமரா உனைக்கண்டு
மன்றாடி நின்றுமே மனமும் இரங்கலையோ
மன்றாடி சுந்தரன் மைந்தனே முருகைய்யா
இன்றேனும் எந்தனுக்கு இன்னருள் புரிவாயே