அருள்மிகு கனகவேல் கந்தன்:
கனகசபாபதி கனல்விழி தனில் வந்த
கனகவேல் கந்தாஉன் கழலினையே துணை
மனதுக்கினிய உன்னை மனதாலும் வாக்காலும்
மனமுருகி பணிந்தேனே மனமிரங்கி அருள்வாயே
சினமுடன் சூரனை சிதைத்த சண்முகனே
தனமுடன் கல்வியும் தந்திடும் சுந்தரனே
உனது பணி இந்த உலகினை காப்பதுவே
எனது பணி உனக்கு பணிசெய்து கிடப்பதுவே