அருள்மிகு கார்த்திகேயன்
தந்தையின் கண்ணிலே தணலாய் வந்தனை
கங்கையின் குளிர்ச்சியால் அங்கம் மலர்ந்தனை
கார்த்திகைப் பெண்களின் கரங்களில் வளர்ந்தனை
தாயின் அணைப்பிலே சேயாய் சேர்ந்தனை
பிரணவப் பொருளினை பரமனுக்குரைத்தனை
சூரனை வதைத்து சுரர்களை காத்தனை
வாசவன் மகளையே வலக்கரம் பிடித்தனை
குறமகள் வள்ளியை கொஞ்சி கவர்ந்தனை
தமிழ் மூதாட்டியின் தமிழை
ரசித்தனை
திருப்புகழ் பாடவே அருணகிரிக்கருளினை
குருபரன் குரல் கேட்க குரலைக் கொடுத்தனை
அன்பருக்கருளவே அறுபடை அமர்ந்தனை