அருள்மிகு கார்த்திகை பாலன்
நினைவெல்லாம் நீதானே நீலமயில் வாகனனே
உனையன்றி எனக்கருள எவருண்டு உலகிலே
வினை நீங்க வேலுண்டு வரம் தர நீயுண்டு
கனவிலும் உனை மறவேன் கார்த்திகை பாலனே
பாலோடும் பழமோடும் காவடி ஏந்தி நின்
பால்முகம் காணவே பழனிக்கு வந்தேனே
பாதி மதி சூடும் சுந்தரன் மைந்தனே
பாமர நேசனே பரிவுடன் அருள்வாயே