அருள்மிகு கார்த்திகை மைந்தன்
தலையே நீ வணங்காய் தாமரைச் செல்வனையே
புலன்களை வென்றிடவே புலன்களால் பணிவோமே
கண்களே காண்பீரே கந்தன் திருவுருவை
நாசியே நீ நுகர்வாய் நாதன் வரவினையே
வாயேநீ பாடிடுவாய் வாசவன் மருகனையே
செவிகளே கேட்பீரே சுந்தர திருப்புகழை
கால்களே நடவீரே கந்தனவன் கோவிலுக்கே
கைகளே தொழுவீரே கார்த்திகை மைந்தனையே