அருள்மிகு குன்றுதோறாடும் குமரன்
குன்றுதோறாடும் குமரனின் பெயரை
அன்றாடம் சொன்னாலே அற்புதம் நிகழுமே
மன்றுதோறாடும் மகேசன் மைந்தனை
மனதார நினைத்தாலே இனிதருள் புரிவானே
காவடிகள் ஏந்தியே கந்தனை கண்டாலே
பாவங்கள் நீங்கியே புண்ணியம் சேருமே
சேவற்கொடியுடைய சுந்தரமூர்த்தியின்
சேவடி தொழுதாலே செல்வம் பெறுகுமே