அருள்மிகு குமரன்:
மாமறை போற்றிடும் மலைமகள் மைந்தனே
குன்று தோறும் நின்ற குமரனே கேளாயோ
மாமனோ வெண்ணெய்க்கு மாடுகளை மேய்த்தானே
தந்தையோ பிட்டுக்கு மண்ணைச் சுமந்தானே
பெருத்த வயிறு டைய பெரியவன் தம்பியே
தேனுடன் தினைமாவும் தேடிவந்துண்ணவே
குறமகள் வள்ளியை காதல் புரிந்தாயே
கந்தா உன் கதைஇதுவே சுந்தரா அறிவோமே