அருள்மிகு குளஞ்சியப்பர்:
இளகிய மனமுடைய குளஞ்சியப்பனே
உளமாரப் பணிந்தேனே உன்னருள் வேண்டியே
அளவிலா பெம்மானை ஆரூரர் பாடவே
களவுசெய் வேடனாய் வந்தருள் புரிந்தவனே
அருணகிரி குமரகுரு அவ்வைக்கு அருளியதை
அறிவேனே ஆறுமுகா அறுபடை அமர்ந்தவனே
குஞ்சரிவள்ளியுடன் கொஞ்சிடும் சுந்தரனே
தஞ்சமடைந்தேனே தயை புரிவாயே